•May 14, 2012 • 1 Comment

http://84.209.25.249:88/player_mp3_maxi.swf

•May 14, 2012 • Leave a Comment

Continue reading ”

radio

•May 14, 2012 • Leave a Comment

tamil

•May 14, 2012 • Leave a Comment

ஆடுகளம் ஜெயபாலன். . (பேட்டைக்காரன்)

•January 19, 2011 • Leave a Comment



ஆடுகளம் ஜெயபாலன். . (பேட்டைக்காரன்) நிஜவாழ்க்கையை நிழலாக்கியுள்ளா.

பூ விழுந்த மனசு

•December 21, 2010 • Leave a Comment

இன்னும் வெளிவராத கவிதைத்தொகுப்பில் இருந்து சில கிறுக்கல்கள்.

1.
எனக்கென
உனக்கென
பங்குபோட
போராட்டமென்ன நிலமா ?
சூரியன்
கிரணம் படுமிடமெல்லாம்
விரும்பி அருந்தி கொள்ளலாம்

2.
மேற்கில் கரைந்து
கிழக்கில் பரவும்
கிரணங்கள் போல்த்தான்
போராட்டமும்
வெற்றி தோல்வி
நிரந்தரமல்ல

3.
விரலைவிட்டு வளர்ந்த நகம்
விரைவிலேயே ஓடிவது போல்
உன்னை விட்டு விலகியதால்
ஓடிந்து மடிந்து போகின்றேன்

4.
வானவில்லிற்கு
வண்ணமோர் வரப்பிரசாதம்
என் வாசல் தேவதையே
எனக்கு நீதான் வரப்பிரசாதம்

5.
இரவின் சுவடுகளை
தேடுவதுபோல் – இழந்துவிட்ட
இளமையை தேடுகின்றோம்
விரிந்து கிடக்கும் வாழ்நாளை
விரயமாகவே கழிக்கின்றோம்

6.
அமைதியாய் ஓடிய தீக்குழம்பு
அழுத்தத்தால் எரிமலையானது போல்
எம் தமிழின வாழ்வும் ஆகியதோ ?
தலைவன் வருகையும் தோன்றியதோ ?

7.
தறிக்க முடியா அதிகாரத்தால்
தட்டுக்கள் எல்லாம் தனியேவாகின
அடித்தோய்ந்த அலையினால் (தலைவன் வருகை)
அதிகார வர்க்கமே அடங்கிப்போனது

8.
தொப்புள் கொடி
துண்டித்தபோது
வலிக்கவில்லை – அன்பே
உன் தொடர்பறுந்தபோது
துடித்து மடிந்தேனடி

9.
முதலிரவிற்கு முகூர்த்தம் பார்த்தான்
வளைகாப்பும் வசதியாய் செய்தான்
பெத்தது பெட்டை என்றதும்
சத்தமில்லாமல் கள்ளிப்பால் கொடுத்தான்

10.
பொறுமையின் கர்ப்பத்தில் கண்வளர்த்தவளே
வெல்வெட்டில் கால் துடைத்து
வெண்ணிலவில் படுத்துறங்க நினைக்காமல்
என்னுடன்
பாலைவனத்திலும் சோலைவனமாய் வாழ்கிறாய்
வணங்குகின்றேன்
கையெடுத்தல்ல காலடியில் வீழ்ந்து

மரபழியாமல் வாழ்வோம்

•December 20, 2010 • Leave a Comment

முகம் தொலைத்து வந்தோம்
இன்று முகவரியும் தொலைத்து விட்மோம்
மண் அழிந்தாலும் மரபழியாமல் வாழ்வோம்

பொன்கொடுத்து மண் எடுத்த காலம் மாறிபபோய்
இன்று பெண்கொடுத்து மண் எடுக்கும் காலமாகிநிற்கின்றது

மாற்றம் அது மாற்றமில்லாதது

மாறும் அதுவரை மவுனமாய் அழுவோம்

இல்லை மாண்டு போவோம்

காலத்தை எனதாக்கி இன்றுமுதல் நானும் உங்களோடு……….

•December 20, 2010 • Leave a Comment

paranee- livestreaming video powered by Livestream

•October 15, 2009 • Leave a Comment

paranee- livestreaming video powered by Livestream

Shared via AddThis

ஈமெயிலில் வந்த ஓரு இணைப்பு

•December 29, 2008 • Leave a Comment

அன்புக்குரியவர்களே!

முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது.

~தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்| என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது.

அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன – அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார்.

அந்த வழியில் அவர் – ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு – நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல்.

பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடியே, பல விடயங்கள், இப்போது அவர் இல்லாத காலத்தில் நடக்கின்றன.

நடப்பவற்றைப் பார்த்து ஒரு புறம் கவலையும், நடக்கும் என்று சொன்ன அந்த மனிதரின் தொலைநோக்குப் பார்வையை நினைத்து மறுபுறம் வியப்பும் அடைகின்றேன்.

2001 ஆம் ஆண்டு, நத்தார் நாள் அன்று, லண்டனில் அவரது வீட்டில் அவரோடு கதைத்துக்கொண்டிருந்தேன்.

இந்தக் கால கட்டம் தான் முக்கியமானது. அதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

‘ஜெயசிக்குறு” படையினரைத் திருப்பித் துரத்தி, பரந்தனோடு ஆனையிறவை வீழ்த்தி முகமாலை வரை முன்னேறி நிலை கொண்டிருந்து புலிகள் படை. ஆனையிறவைத் திரும்பவும் பிடிக்க “தீச்சுவாலை” என்ற மாபெரும் படையெடுத்தவர்களையும் புலிகள் முறியடித்திருந்தனர்.

கிழக்கில் மிகப் பெரும் நிலப்பரப்பும் புலிகளின் ஆளுகையில் இருந்தது.

தமிழீழப் போர் அரங்கில் நிகழ்ந்திருந்த இந்த மாபெரும் இராணுவ சாதனைகளின் மகுடமாக -கட்டுநாயக்கா வான்படைத்தளத்தையும், விமான நிலையத்தையும் தாக்கி, சிறிலங்காவின் பொருளாதாரத்தையும் புலிகள் அதள பாதாளத்தில் தள்ளியிருந்தனர்.

வாலைச் சுருட்டிக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வரத் தயாரானது சிறிலங்கா அரசு.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அப்போது சர்வதேச மயப்பட்டிருக்கவில்லை.

முதற் தடவையாக, அப்போது தான், தென்னாசியாவுக்கு வெளியிலிருக்கும் நாடொன்று இலங்கை இனப்பிரச்னையில் தொடர்புபட்டது.